நுவரெலியாவில் கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் இயங்கும்!

நுவரெலியா நகரில் 500 படுக்கை வசதிகளைக் கொண்ட சகல வசதிகளுடனும் கூடிய தனிமைப்படுத்தல் மையம் நாளை முதல் (18.05.2021) செயற்படும்.

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் தொற்றாளர்களை முறையாக பராமரிக்கின்ற முகமாக நுவரெலியா நகரில் 500 படுக்கை வசதிகளை கொண்ட தனிமைப்படுத்தல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா சினிசிட்டா உள்ளக அரங்கம் மற்றும் சினிசிட்டா கேட்போர் கூடம் ஆகியவற்றிலேயே இந்த தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது .இந்த வேலைத்திட்டத்தை நுவரெலியா பாதுகாப்பு படை பிரிவின் மூன்றாவது செயலனியின் கொமான்டர் அசித ரணதிலக்க நுவரெலியா மாநகர சபை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை சுகாதார அமைப்புகள் ஆகியன இணைந்தே இந்த தனிமைப்படுத்தல் மையத்தை தயார்படுத்தியுள்ளனர்.

இந்த தனிமைப்படுத்தல் மையத்தில் ஒரே நேரத்தில் 500 தொற்றாளர்களை தங்கவைத்து அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

அதே நேரம் நுவரெலியாவில் தற்பொழுத நிலவும் குளிரான காலநிலையை கருத்தில் கொண்டு தொற்றாளர்களின் பாவனைக்காக சுடுதண்ணீர் வசதிகள் உட்பட ஏனைய வசதிகளும் இங்கு முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளதுடன் நாளை முதல் (18.05.2021) இந்த தனிமைப்படுத்தல் மையம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

Related Articles

Latest Articles