பயணத்தடை நீடிப்பு குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை…..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை நாளை காலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படும். அன்றிரவு 11 மணி முதல் மீண்டும் அமுல்ப்படுத்தப்படும்.
? மே 26,27,28,29 மற்றும் 30 ஆம் திகதிகளிலும் பயணக்கட்டுப்பாடு முழுமையாக அமுலில் இருக்கும். 31 ஆம் திகதி காலை 4 மணிக்கு பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்பட்டு, அன்றிரவு இரவு 11 மணி முதல் ஜுன் 4 ஆம் திகதி காலை 4 மணிவரை மீண்டும் அமுலில் இருக்கும்.
? ஜுன் 4 ஆம் திகதி காலை பயணக்கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்பட்டு அன்றிரவு 11 மணி முதல் ஜுன் 6 ஆம் திகதிவரை மீண்டும் அமுலில் இருக்கும். 7 ஆம் திகதி காலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும்.
? பயணக்கட்டுப்பாடு இவ்வாறு தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே – அதுவும் அருகிலுள்ள கடைக்கு செல்ல முடியும். முடிந்தளவு நடந்துசெல்லக்கூடிய தூரத்தில் உள்ள கடைகளுக்குச்செல்லவும். வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.
? பொதுபோக்குவரத்துக்கு அனுமதி இல்லை. வாடகை வாகனங்களிலும் பயணிக்க முடியாது.
? பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளைத்தவிர இதர வியாபார நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
? ஜுன் 7 ஆம் திகதிவரை மதுபானசாலைகள் தொடர்ச்சியாக மூடப்படும்.
? விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்படும். நடமாடும் பொருட்கள் விநியோக சேவையையும் உரிய வகையில் – சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கலாம்.
? பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும். அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை எவரும் தவறாக பயன்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை.
? பொருட்களை வாங்க, ATM இயந்திரங்களில் பணம் எடுக்கவேண்டிய தேவை இருந்தால், அதனை பெறுவதற்கு செல்ல முடியும். அதனை அரசு தடுத்து நிறுத்தாது.
? கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு செல்ல முடியும். அதற்கு எவ்வித தடையும் இல்லை.
? கொரோனா வைரஸ்பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கபடும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். மக்களை காக்கவே பயணக்கட்டுப்பாடு அமுலில்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சர்களான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, பிரசன்ன ரணதுங்க மற்றும் இராணுவத்தளபதி, பொலிஸ் பேச்சாளர் ஆகியோர் வெளியிட்ட கருத்துகளின் தொகுப்பே மேல் தரப்பட்டுள்ளது.
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles