2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கான திகதி அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும், திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கௌரவமாகவும் ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கும் விழாவானது, அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 25 ஆம்  திகதி  ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிலையில், 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் 94-வது ஆஸ்கர் விருது விழாவிற்கான திகதி  அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பெப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட விழாவானது, ஒரு மாதம் தாமதமாக மார்ச் 27-ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் விழா நடக்கும் என்றும் ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles