ஜுன் 14 இற்கு பிறகும் பயணக்கட்டுப்பாடு தொடருமா?

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு ஜுன் 7 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜுன் 14 ஆம் திகதி கடும் நிபந்தனைகளுடனேயே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. உரிய மீளாய்வின் பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை தளர்த்துவதா, எத்தகைய நிபந்தனைகளை விதிப்பது என்பது தொடர்பில் அடுத்துவரும் நாட்களில் தீர்மானம் அறிவிக்கப்படும்.

Related Articles

Latest Articles