ஹப்புத்தலை, பண்டாரவளை முதியோருக்கு தடுப்பு பெற போக்குவரத்து வசதி

ஹப்புத்தலை, பண்டாரவளை முதியோருக்கு தடுப்பு பெற போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹப்புத்தலை, பண்டாரவளை ஆகிய பகுதிகளை சேர்ந்த தோட்ட முகாமையாளர்களுடன் செந்தில் தொண்டமான் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

இக் கலந்துரையாடலின் போது தங்கள் தோட்டங்களில் வசிக்கும் முதியவர்களை கோவிட் தடுப்பூசி மையத்திற்கு அழைத்து செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அத்துடன், பெருந்தொட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தை முழுமையாக அம்மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Related Articles

Latest Articles