‘முரளி 800’ நிச்சயம் திரைக்குவரும் – இந்தியரே நடிகர்! முரளி அதிரடி அறிவிப்பு

‘முரளி 800’ என்ற படம் நிச்சயம் இயற்றப்படும். கொவிட் – 19 பிரச்சினை தீர்ந்த பின்னர் இதற்கான நடவடிக்கை இடம்பெறும். இந்திய நடிகர் ஒருவரே இதில் நடிப்பார். இலங்கையை சேர்ந்த நடிகை ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.”  – என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர், நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ‘முரளி 800’ என்ற படம் இயற்றப்படவிருந்தது. இப்படத்தில் நடிகர் விஜயசேதுபதி நடிக்கவிருந்தார். எனினும், எதிர்ப்புகள் வலுத்ததால் அவர் விலகினார்.

இந்நிலையிலேயே படம் நிச்சயம் வரும் என முரளி தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles