பதுளை, மொனராகலை மாவட்டங்ளில் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மொழி மூலமான 70 பாடசாலைகளில் 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இந்த வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்வேலைத்திட்டங்களின் கீழ் பதுளை மாவட்டத்தில் 07 பாடசாலைகளிலும், மொனராகலை மாவட்டத்தில் 01 பாடசாலையிலும் புதிய கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன், 45 பாடசாலைகளில் திருத்தப்பணிகளும், 17 பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளும் விருத்தி செய்யப்படவுள்ளன.
செந்தில் தொண்டமானால் பரிந்துரைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ள பாடசாலைகளின் பெயர் பட்டியலை உறுதிப்படுத்திய கடிதம் 07.04.2021 அன்று உத்தியோகப்பூர்வமாக ஊவா மாகாண நிதி திட்டமிடலும் சட்டமூம் சமாதானமும், கல்வி, மாகாண, உள்ளூராட்சி, காணி, மின்சக்தியும் வலுசக்தியும் நிர்மாணத்துறை மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் உதவி செயலாளர் எம்.கிரிதிகாவால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதற்கான வேலைத்திட்டங்கள் ஆர்ம்பிப்பதற்கான பணி செந்தில் தொண்டமான் துரிதப்படுத்தியுள்ளார்.
– ஊடகப் பிரிவு











