‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கூட்டம்

ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாளை 18 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜுலை 19 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 20ஆம் திகதிமாலை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. எனவே, இதன்போது ஆளுங்கட்சியிலுள்ள அனைவரும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் மேற்படி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், அரச கூட்டணியில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles