பிரபாகரனின் படத்தை விற்பனை செய்த இருவர் நுவரெலியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட ‘மேதகு’ எனும் படத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவரை நுவரெலியா பிராந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்திவந்தவரும், அவரின் உதவியாளருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த படத்தை பென்ரைவில் போட்டு கொடுப்பதற்கு 50 ரூபா வீதம் பெறப்பட்டுள்ளது. இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles