279 அடி நீளமான தலவாக்கலை, டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள யுவதியை தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
தலவாக்கலை – லிந்துலை, லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதி நேற்று மாலை நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போனார். நேற்று மாலை முதல் தேடுதல் இடம்பெற்றது.
இந்நிலையில் இன்று காலை முதல் இராணுவத்தின் உதவியுடன் மீண்டும் தேடுதல் இடம்பெற்றுவருகின்றது.