‘பேச்சு தோல்வி’ – ஆசிரியர்களின் போராட்டம் தொடரும்

ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரீஸ் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவு பெற்றுள்ளது.

இதன் காரணமாக தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Online கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று (20) ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது.

தமது கோரிக்கையை வலியுறுத்தி சில பகுதிகளில் ஆசிரியர் சங்கங்களினால் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Related Articles

Latest Articles