பதுளை – பெருந்தோட்ட பகுதிகளுக்கு 40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தித் திட்டங்கள்

பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு 40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாதை அபிவிருத்தி , நீர் விநியோக மற்றும் பொது மண்டபங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் 22 பாதைகளும், பெருந்தோட்டங்களுடன் தொடர்புறும் பொதுவான பகுதிகளில் 24
பாதைகளும் தோட்டப்புறங்களில் உள்ள 26 பொது மண்டபங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் 18 நீர் விநியோக திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

செந்தில் தொண்டமானால் பரிந்துரைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ள இத்திட்டங்கள் விபரங்களை உறுதிப்படுத்திய கடிதம் 07.04.2021 அன்று உத்தியோகப்பூர்வமாக ஊவா மாகாண வீதி அபிவிருத்தி வீடமைப்பு நீர்
வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கூட்டுறவு அமைச்சின் திட்டமிடல் உதவி பணிப்பாளர் எஸ்.டபிள்யு.எல். வத்துக்காரவால் அனுப்பிவைக்கப்பட்டதுடன் ,அதற்கான வேலைத்திட்டங்கள் ஆர்ம்பிப்பதற்கான பணிகள் செந்தில் தொண்டமான் அவர்களால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அபிவிருத்தி செய்யப்படவுள்ள பெருந்தோட்ட பாதைகளின் விபரம் வருமாறு,

 

Related Articles

Latest Articles