மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இடம்பெறும் என்று போக்குவரத்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று தெரிவித்தார்.
இதன்படி பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் முன்னெடுக்கப்படவுள்ளன.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமையால் அது இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.