நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயப்பாட்டினை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
சிறுவர் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் , பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மகளிர் பிரிவினர் , கிராம சேவகர்கள் உள்ளிட்டவர்களை உள்வாங்கியே இதற்கான திட்டம் முன்னெடுக்கப்படும் என்று நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர்.கே.கே . ரவி தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 95 பாலர் பாடசாலை ஆசிரியரகளுக்கு தமது சொந்த நிதியில் நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சிறுவர்களை பாதுகாப்பதற்காக உரிய சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் அது நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன. இன்று ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போல் எமது மலையகத்தில் மாத்திரம் தான் சிறுவர் தொழிலில் அமர்த்தப்படுகின்றனர் என்பதில் உண்மைக்கிடையாது.
ஆகவே இந்த அரசாங்க சட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களை தெளிவு படுத்தி சிறுவர்களை வேலை அமர்த்துவதை தடுப்பதற்கு பாலர் பாடசாலை ஆசிரியர்களாகிய ஆகிய நீங்களும் எமக்கு ஒத்துழைக்க வேண்டும். ஏன்னென்றால் ஆரம்ப கட்ட கல்வி செயப்பாகளிலும் பெற்றோருடன் நேரடி தொடர்பிலும் நீங்கள் தான் உள்ளனர்.
உங்களுக்கு தெரியும் அண்மையில் டயகம பகுயில் சிறுமி ஒருவர் முன்னாள் அமைச்சர் ரீசாட் பதியுதீனின் வீட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்தார்களா என்ற சம்பவம் முழு மலையகத்தினை உலுக்கியுள்ளது.
ஆகவே இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் எமது பிரதேசத்தில் நடைபெறக்கூடாது.அதற்காக நாம் ஒன்றிணைந்து செயப்பட வேண்டும். ” – என்றார்.
சுகாதார பொறிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில் பிரிடோ நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்டமுகாமையாளர் என.கருணாகரன், இணைப்பாளர் அமரசெல்வம் , பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஆகயோர் கலந்து கொண்டனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்