முன்னாள் – இந்நாள் ஜனாதிபதிகள் இன்று சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த தகவலை சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் உறுதிப்படுத்தினார்.

சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்பில் பங்கேற்பார்கள்.

அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேற வேண்டும் என அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்திவருகின்றனர். கூட்டு அரசுக்குள் தமது கட்சிக்கு புறக்கணிப்பு தொடர்வதாக மேலும் சில சு,க. உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மைத்திரி அணி, ஜனாதிபதியை சந்திக்கின்றது. இரு தடவைகள் பேச்சுக்கான திகதி ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே நாளை நாள் குறிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் பின்னர் சுதந்திரக்கட்சி உறுதியானதொரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles