நடிகை ‘பபா’ கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்‌ஷா சுவர்ணமாலி (பபா) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார அவரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி – நுகவெல வீதியில், நுகவெல பிரதேச செயலகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது உபேக்ஷா பயணித்த வாகனம் மோதியுள்ளது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட உபேக்‌ஷாநடி சுவர்ணமாலி இன்று(26) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles