ரிஷாட்டின் குடும்பத்தார் மற்றும் புரோக்கருக்கு மறியல் – நீதிமன்றம் உத்தரவு

ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரின் தந்தை, சகோதரர் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துவந்த இடைத்தரகர் ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் மலையக சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பபட்டிருந்தனர்.

இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles