நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமி ஹிஷாலியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை மீள நடத்துவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி ஹிஷாலினியின் சடலம் தோண்டப்பட்டு மீள் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
ஹிஷாலியின் மரணம் மீது தமக்கு சந்தேகம் காணப்படுவதனால், சடலத்தை மீள தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைகளை நடத்த வேண்டும் என ஹிஷாலியின் பெற்றோர் கோரியிருந்தனர். சி.ஐ.டியினரும் நீதிமன்றத்தில் இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், சடலம் மீது புதிய சட்ட வைத்திய அதிகாரியொருவர் விசாரணைகளை நடத்தி, அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என விசாரணைகளை நடத்தும் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
இதற்கே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.