பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? வெளியானது அறிவிப்பு

பாடசாலைகள் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மீள திறக்கப்படும் – என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை 2022 ஜனவரியில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். எனினும், கொரோனா நிலைமையால் அதனை சற்று ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சாதாரண தரப்பரீட்சைகள் 2022 பெப்ரவரி 21 திங்கட்கிழமை முதல் மார்ச் 3 ஆம் திகதி வியாழக்கிழமைவரை நடத்தப்படும்.

அதேவேளை, ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை திருப்திகரமாக இடம்பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்குள் 2ஆவது டோசும் வழங்கப்படும். செப்டம்பர் ஆரம்பத்தில் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles