ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்பெண் 2009 ஆம் ஆண்டு முதல் 2020வரை ரிஷாட்டின் வீட்டில் வேலை செய்துள்ளார். தற்போது களனி பகுதியில் வேலை செய்யும் நிலையிலேயே அவரிடம் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிஷாட்டின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம், குறித்த 29 வயதான பெண் நேற்று வாக்குமூலமளித்தார்.