கம்பளை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த தொற்றாளர் ஒருவர் இன்று காலை தப்பியோடியுள்ளார்.
72 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார் எனவும், அவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைரஸ் தொற்று உறுதியான குறித்த நபர் சிகிச்சைக்கு செல்லாமல் தலைமறைவான நிலையிலேயே இருந்துள்ளார். எனினும், அவரை அதிகாரிகள் சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுவந்தனர்.
இந்நிலையிலேயே இன்று காலை தப்பியோடி, கம்பளை – தொழுவ, குறுகல பகுதியில் உள்ள வீட்டில் இருந்துள்ளார். அவரை மீண்டும் சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஆட்டோவொன்றிலேயே அவர் சென்றுள்ளார்.










