மலையக கலாசார மேம்பாட்டுக்காக நிதியமொன்று உருவாக்கப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள விடயங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டுள்ளது. இதில் 13 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சேவைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.