மாகாணங்களுக்கு இடையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பயண கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க விசேட பாதுகாப்பு திட்டங்கள் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையில் நேற்று நள்ளிரவு முதல் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.










