எதிர்வரும் 17 ஆம் திகதி அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது எனவும், நான்கு அமைச்சுக்களில் மட்டும் மாற்றம் இடம்பெஙறவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
இதன்படி அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, டலஸ் அழப்பெரும மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும், தற்போதைய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும்,மின்சக்தி அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், ஊடக அமைச்சராக டலஸ் அழப்பெருமவும் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, சுகாதார அமைச்சு பதவியில் மாற்றம் இடம்பெறாது எனவும், பவித்ராவே அப்பதவியில் நீடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.










