‘இந்திய வீட்டுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்’

இலங்கைக்கான – இந்திய துணை உயர்ஸ்தானிகராக அண்மையில் பதவியேற்ற அதிராவை ,தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.

கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலய இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்தானிக செயலாளர் கிருஷ்னபிரசாத் , பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமி மற்றும் அமைச்சரின் இணைப்பு செயலாளர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது ஆகஸ்ட் (15 )கொண்டாடப்பட்ட இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், உதவி உயர்ஸ்தானிகராக பதவியேற்றுள்ள டாக்டர் ஆதிராவுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் ஞாபக சின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார்.

அத்துடன் இந்த சந்திப்பில் மத்திய மாகாணம், ஊவா மாகாணங்களில் இடம்பெறும் கல்வி அபிவிருத்தி,உட்பட இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இடம் பெற்று வரும் வீட்டுத்திட்டம் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இலங்கை,இந்திய இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைதிட்டம் தொடர்பாகவும், மலையகத்திலுள்ள பின்தங்கிய பாடசாலைகளின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles