இறக்குவானை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை நாளை முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகின்றது. இறக்குவானை பகுதியிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், வங்கிகள் மற்றும் அத்தியாவசிய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கும்.
