இலங்கையில் 3 வகையான டெல்டா திரிபுகள் – ஆய்வில் தகவல் (Video)

இலங்கையில் இதுவரையில் மூன்று விதமான கொரோனா வைரஸ் டெல்டா திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

SA222V, SA701F, SA1078S ஆகியவையே அவையாகும் எனவும்  நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

தடுப்பூசி ஏற்றுவதன்மூலம் மக்களின் உயிர்களை பாதுகாக்க முடியும். அதற்கான வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தகவல் வெளியிட்டார்.

 

Related Articles

Latest Articles