கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் வகையில், (இன்று) 17-08-2021ல் முதல் பண்டாரவளை மாநகரம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை மாநகர ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில், மாநகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் ஒருவாரத்திற்கு எதிர்வரும் 23ந் திகதி வரை மூடப்பட்டள்ளன.
பண்டாரவளை மாநகரில் வேகமாகப் பரவி வரும் கோவிட் 19 தொற்றினை தடுத்து, மக்களை பாதுகாக்கும் வகையிலேயே, மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகரின் நகை அடகுபிடிக்கும் நிலையங்கள், மருந்தகங்கள், கூட்டுறவுச் சங்கக் கடைகள் ஆகியவற்றைத் தவிர்த்து, ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
எம். செல்வராஜா, பதுளை
