நுவரெலியா பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை பகுதியில் இன்று (18) பிற்பகல் வரை 84 கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதுடன், இப்பிரேசத்தில் இதுவரை 05 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
இன்று (18) காலையில் கந்தப்பளை சந்திரகாத்தி தோட்டம் ,பார்க் தோட்டம் ஆகியவற்றில் 05 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் டப்ளியூ.ஜீ.அமில தெரிவித்தார்.
அதேவேளை, கந்தப்பளை பிரதேச தோட்டப்பகுதி வெளிக்கள உத்தியோகஸ்தர்கள்,தோட்ட சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட 673 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் கந்தப்பளை மஹிந்த வித்தியாலயத்தில் இன்று (18) காலை வழங்கப்பட்டன.
டி.சந்ரு, ஆ.ரமேஸ்.
