ஒருமித்து வாக்களித்து தனித்துவம் காப்போம் என்று இரத்தினப்புரி மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கின்றார் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம்.சந்திரகுமார்.
இரத்தினப்புரி களவான தேர்தல் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
” தேயிலை, இறப்பர், தென்னை போன்ற சகல வளங்களும் விளையும் நாடாக எமது நாடு இருந்தாலும் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது பொருளாதார பின்னடைவுடன் எமது நாடு இருப்பதற்கான காரணம் நம் நாட்டில் காணப்படும் அரசியல் முறைமையே.
நாம் மற்றைய நாடுகளில் தங்கியிருக்க சுதந்திரத்திற்கு பின்னர் இந்நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களே பொறுப்பு கூறவேண்டியவர்களாக காணப்படுகின்றனர். இதற்கு பிரதான காரணமாக அமைவது புத்திஜீவிகள் பாராளுமன்றம் செல்லாமையே. நீதி சட்டம் ஒழுங்கு என்பன என்ன என்பதை அறியாத அரசியல்வாதிகளே எம்மை ஆள்கின்றனர்.
கடந்த அமைச்சரைவையிலே சுமார் 96 பேர் சாதாரண தரம் சித்தியடையாதவர்கள் அதனாலேயே மிளகாய் தூள் கலாசாரமும் சபாநாயகர் ஆசனத்திலே நீர் ஊற்றும் செயற்பாடுகளும் காணப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையில் எம் நாடு எவ்வாறு அபிவிருத்தியை நோக்கி நகறும். இதற்கு படித்தவர்கள் நாடாளுமன்றம் செல்லவேண்டும். இதனால்
ரம்புக்கந்தை தோட்டத்திலே பிறந்து பட்டதாரியான தன்னை போன்ற படித்தவர்ளுக்கே தங்களின் வாக்கையளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் சேவையாற்ற கூடிய சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்கவே எமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். இத்தருணத்தில் சிந்தித்து செயற்பட வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடப்பாடாகும். எனவே இம்முறை பாராளுமன்ற தேர்தலிலே சிந்தித்து செயற்பட்டு 10 இல தொலைபேசிக்கு தங்களது வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
19ஆம் திருத்த சட்டத்தின் பிரகாரம் நாட்டின் ஜனாதிபதியை விட பிரதமருக்கே அதிகாரங்கள் அதிகம் என்பதோடு ஒரு சிறந்த அமைச்சரைவ அமைந்தால் மாத்திரமே நாட்டை வளமான வழியில் நடாத்தி செல்ல முடியும். அவ்வாறான ஒரு சிறந்த அமைச்சரவை 6ம் திகதி கௌரவ சஜித் பிரேமதாஸ தலைமையில் அமையும்.
இன மத மொழி வேறுபாடின்றி எம் சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் எனவே தொலைநோக்குடன் சிந்தித்து இல10 தொலைபேசிக்கு ஒருமித்து வாக்களிப்பதனூடாக எம் உரிமையை வெளிப்படுத்துவதோடு தனித்துவம் காப்போம் என்றார்.