‘கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை’ – புதிய நடைமுறைகள் அறிவிப்பு

மேல் மாகாணத்தில், கொரோனா நோயாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு உட்படுத்தல் அல்லது வீட்டில் வைத்து சிகிச்சையளிப்பதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன.

புதிய முறைமைகளின் கீழ் தொலைபேசியினூடாக தகவல்களை வழங்குதல் குறுந்தகவல் (SMS) ஊடாக அறிகுறிகள் குறித்து அறிவிக்க முடியும்.

இதற்காக 1904 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

⭕ நோய் தாக்கம் அதிகரித்திருப்பின் (சுவாசிக்க சிரமம்) அந்த நோயாளர்கள் A இடைவௌி (Space) வயது இடைவௌி தேசிய அடையாள அட்டை இலக்கம் இடைவௌி விலாசம் என்பவற்றை குறிப்பிட்டு குறித்த இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்ப முடியும்.

⭕ காய்ச்சல் மாத்திரம் ஏற்பட்டிருப்பின் அந்த நோயாளர்கள் B இடைவௌி வயது இடைவௌி தேசிய அடையாள அட்டை இலக்கம் இடைவௌி விலாசம் என்பவற்றை குறிப்பிட்டு 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்ப முடியும்.

⭕ எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாத நோயாளர்கள் C இடைவௌி வயது இடைவௌி தேசிய அடையாள அட்டை இலக்கம் இடைவௌி விலாசம் என்பவற்றை குறிப்பிட்டு 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்ப முடியும்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் குறுந்தகவல்கள் கொவிட் ஒழிப்பு தேசிய மத்திய நிலையத்தின் ஊடாக வைத்திய குழுக்களுக்கு அறிவிக்கப்படும்.

நோயாளர்கள் வழங்கும் தகவலுக்கு அமைய 247 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக அவர்களைத் தொடர்புகொண்டு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக அம்பியூலன்ஸ் சேவை உள்ளிமட்ட ஏனைய சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர வீட்டில் தனிமைப்படுத்தப்படும் கொரோனா நோயாளர்களை வைத்திய குழுவினர் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு தேவையான சிகிச்சைகள் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1390 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles