நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கும் செயப்பாடுகள் தொடரந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி இன்றைய தினம் (20) மஸ்கெலியா, ஸ்ரீ சண்முகநாத ஆலய மண்டபத்திலும், நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திலும், வனராஜா ஆலய மண்டபத்திலும் சைனோ பாம் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் வழங்கப்பட்டது என்று மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டி. சந்திரராஜன் தெரிவித்தார்.
வனராஜ ஆலய மண்டபத்தில் மாத்திரம் 2 ஆயிரம் , இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மூன்று தடுப்பூசி நிலையங்களிலும் சுமார் 7 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்










