கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்றியவர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாக கூறினார். 14 வீதமானோருக்கு சிறு அளவிலான அறிகுறிகளே தென்படுகின்றன. அவர்களும் குணமடைகின்றனர். 5 வீதமானோரோ கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களிலும் மூன்று வீதமானோர் குணமடைகின்றனர். 1.9 வீதமானோரோ இலங்கையில் மரணிக்கின்றனர்.
எனவே, தேவையற்ற அச்சம் அவசியமில்லை. மக்கள் மத்தியில் மரண பீதியை ஏற்படுத்தக்கூடாது.










