கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, குணமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் இன்று வீடு திரும்புகின்றார். இரு வார ஓய்வின் பின்னர் மீண்டும் சேவையை தொடரவுள்ளதாகவும், தான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.










