மஹியங்களை, தம்பான ஆதிவாசிகள் கிராமம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் உள்ள 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வேடுவர் சமுகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னி லாகே அத்தோவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் சிலர் சிகிச்சைக்காக மஹியங்களை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.










