நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதியிலுள்ள வாராந்த சந்தைப் பகுதியில் 75 வயதுடைய மூதாட்டியொருவர் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டியை அவ்விடத்துக்கு அழைத்துவந்து – விட்டுச்சென்ற நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
குறித்த மூதாட்டி நேற்று மாலையே சந்தைப்பகுதியில் விடப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, தமது பொறுப்பாளர்கள் யார் என்பதை கூறவில்லை எனவும், தான் மாகஸ்தொட பகுதியில் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிறிது காலம் நுவரெலியா, லபுகலை பகுதியில் இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.