இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுத்த யானை – 8 தசாப்தங்களுக்கு பிறகு அபூர்வம்

பின்னவல யானைகள் சரணாலயத்திலுள்ள ‘சுரங்கி’ என்றழைக்கப்படும் யானையொன்று இன்று இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.

முதலாவது குட்டியை இன்று அதிகாலை 4 மணிக்கு ஈன்றெடுத்ததுடன், இரண்டாவது குட்டியை மதியம் 12 மணிக்கு ஈன்றெடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்த இரண்டு குட்டிகளும் ஆண் குட்டிகள் என அறிய முடிகின்றது.

இதற்கு முன்னர் 1941 ஆம் ஆண்டளவிலேயே இலங்கையில் இவ்வாறானதொரு சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Latest Articles