கடும் நிதி நெருக்கடிக்குள் அரசு – செலவீனங்களை மட்டுப்படுத்த முடிவு

அரசு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அரச செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கும் இறுக்கமான நிதி முகாமைத்துவ முறைமையைக் கையாள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண கூறியதாவது,

“ தற்போதைய நிதி நிலைமையைக் கருத்திற்கொண்டு சில முடிவுகளை எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருந்தால் – அதற்கான நிதி இல்லையேல் திட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்தி முடிவான்றை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

2ஆவதாக அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை நிறுத்துமாறு நிதி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்களின் பணியாளர் குழாமுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில், அவசியமற்ற கொடுப்பனவுகளை நிறுத்துதல். உதாரணமாக தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது. எனவே, எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவதற்கும், உரிய வகையில் நிதியை முகாமை செய்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.” – என்றார்.

Related Articles

Latest Articles