‘ஊரடங்கால் தோட்டப்பகுதிகளில் மாயமாகும் நாட்டு கோழிகள்’

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள ஒரு சில தோட்டங்களில் தற்போது திடீர், திடீரென நாட்டு கோழிகள் காணாமல் போவதாக கோழி வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

கீரி அல்லது சிறுத்தையே கோழிகளை வேட்டையாடி உண்பதாகவே ஆரம்பத்தில் நினைத்தோம், ஆனால் நாளாந்தம் இந்நிலைமை நீடிக்கின்றது என தெரிவிக்கும் கோழி வளர்ப்பாளர்கள், இதன் பின்னணியில் கொள்ளை கும்பலொன்று செயற்படுகின்றதாகவும் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதனைமீறி சில தோட்டங்களில் உள்ள இளைஞர்கள் காட்டுப் பகுதிகளுக்குச்சென்று கூட்டாஞ்சோறு சமைத்து உண்பதை காணமுடிகின்றது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களே கோழிகளை களவாடிச்சென்று சமைக்கக்கூடும் என மக்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

ஒரு சில இடங்களில் கோழிகளை பிடித்துச்சென்று, நகரம் அல்லது நாட்டுப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles