கொரோனா வைரஸ் தொற்றால் அக்காவும், தம்பியும் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று பூகொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்குள் இருந்து அவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன.
ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 43 வயதுடைய அக்காவும், ஆட்டோ சாரதியாக பணியாற்றும் 38 வயதான தம்பியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.