” தற்போதைய சூழ்நிலையில் நாட்டை எதிர்வரும் 13 ஆம் திகதி திறக்க முடியும் என நம்புகின்றேன்.” – என்று அரசாங்க மருந்தாங்க கூட்டுத்தாபனத்தின் தலைவர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
செப்டம்பர் 13 ஆம் திகதிக்கு பிறகும் நாடு முடக்கப்பட வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை முன்வைத்துள்ளனர். இல்லை, திறக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது விடயத்தில் உங்கள் நிலைப்பாடு என்னவென எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.