” தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் மலையக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோதுமை மாவின் விலையை அதிகரித்து அம்மக்களுக்கு அரசாங்கம் மீண்டும் நெருக்கடி கொடுத்துள்ளது. ” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் தெரிவித்தார்.
” மலையக பகுதிகளில் ரொட்டியும் பிரதான உணவாக உள்ளது. அதற்காக கோதுமை மா பயன்படுத்தப்படுகின்றது. தற்போது மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பை எதிர்த்து, அதனை குறைக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஆளுங்கட்சியிலுள்ள மலையக பிரதிநிதிகளுக்கு முதுகெலும்பில்லை.
கிராம பகுதிகளில் அங்குள்ளவர்களுக்கு நிலம் இருக்கின்றது. அதில் விவசாயம் செய்கின்றனர். வயலும் உள்ளது. அரிசிக்கும் சிக்கல் இல்லை. எமது பகுதியில் எல்லாவற்றையும் கொள்வனவு செய்யவேண்டிய நிலைமை. இந்நிலையில் எமது மக்களுக்கு கிடைக்கவேண்டிய காணியையும் வெளிநபர்களுக்கு விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ” – என்றார்.