திருத்தந்தை பாப்பரசரை தரிசிப்பதற்காக வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. அத்துடன், இது தொடர்பில் பிரதமருக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை – என்று வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்தது.
இத்தாலி பிரதமர் , இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதாகா பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் விரைவில் இத்தாலியின் பொலோக்னாவுக்கு செல்லவுள்ளனர். பொலோக்னாவில் நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் இருவரும் நாடு திருப்புவார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.