மடுல்சீமை குடுதோவ பகுதியில் கள்ளச்சாராயம் (கசிப்பு) உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து,குறித்த பகுதிக்கு விரைந்த மடுல்சீமை பொலிஸார், கள்ளச்சாராய உற்பத்தியில் ஈடுபட்ட 22, 25 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் குடுதோவ பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இவர்களிடமிருந்து 52400 மில்லி லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் சில உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை செய்தியாளர்