நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பது உறுதியாகியுள்ளதென ஆளுங்கட்சி எம்.பியான ஜகத் குமார தகவல் வெளியிட்டுள்ளார்.
இதனால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தும் வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளேன் என வெளியாகும் தகவலை என்னால் உறுதிப்படுத்தவும் முடியவில்லை. நிராகரிக்கவும் முடியவில்லை என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.