போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ‘பொப் மார்லி’ என அழைக்கப்படும் சமிந்த தாப்ரேவ் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்கில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது. இதனையடுத்து தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.