அத்தியாவசியமற்ற / அவசர தேவையற்ற தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு (623) 100 வீத உத்தரவாத பண வைப்பீட்டை அத்தியாவசியமாக்கி, உடன் அமுலாகும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த நாணய சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் இந்த அறிவிப்பால், மேற்படி பொருட்களுக்கு எதிர்காலத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும், விலையும் சடுதியாக அதிகரிக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.