14 வயது சிறுவன் சுட்டுக்கொலை! வீரக்கெட்டியவில் பயங்கரம்!! மூவர் கைது

வீரக்கெட்டிய,வேகந்தவல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவரொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் தந்தையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலேயே சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவனின் உறவினர் ஒருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். பொலிஸார் விசாரணைகள் தொடர்கின்றன.

Related Articles

Latest Articles