மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை தோட்டத்தில் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
39 வயதுடைய பெண்ணொருவரே, வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள தேயிலை மலையிலுள்ள மரமொன்றில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. தனிப்பட்ட பிரச்சினையால் தற்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகிக்கின்றனர். பொலிஸ் விசாரணைகள் பலகோணங்களில் தொடர்கின்றன.
குறிப்பு : வாழ்வில் பிரச்சினைகளுக்கு உயிரை மாய்த்துக்கொள்வது தீர்வாக அமையாது. எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது. குடும்ப உறுப்பினர்கள், அயலவர்கள், நண்பர்களுடன் அன்புடன் பழகுவது இதுபோன்ற செய்திகளை நாம் கேட்காமல், சந்திக்காமல் இருக்க உதவும்.