கொரோனாவைவிட இந்த அரசாங்கம் கொடூரமானது! சஜித் அணி சாட்டையடி!!

” கொரோனாவும், தற்போதைய அரசும் ஒன்று. எனவே, இவ்விரண்டு வைரஸ்களுமே இல்லாதொழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் விடிவு பிறக்கும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அரசை, வைரசுடன் ஒப்பிட்டு கடும் விமர்சனங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்மோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் முன்வைத்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் கொரோனா வைரஸ்  தாண்டவமாடுகின்றது. வெளிநாட்டில் இருந்துதான் இந்த வைரஸ் எமது நாட்டுக்குள் நுழைந்தது. அதுபோல்தான் ‘நாட்டு தலைமைத்துவம்’ என்ற வைரசும் வெளிநாட்டில் இருந்தே வந்துள்ளது. நிதி அமைச்சரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்தான். தற்போதைய அரசையும், தலைமையையும் வைரஸ் என விளிப்பதற்கு காரணம் உள்ளது.

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கொமிஷன் என்ற வைரசும் வேகமாக பரவிவருகின்றது. உலக நாடுகளில் மக்களை பாதுகாக்கவே தடுப்பூசி ஏற்றப்பட்டது, ஏற்றப்பட்டுவருகின்றது. ஆனால் எமது நாட்டில் அரசை பாதுகாக்கவே தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. தடுப்பூசியை வைத்து அரசியல் நடத்தப்படுகின்றது. நவம்பர் மாதம் பெருமெடுப்பில் நிகழ்வொன்றை நடத்தவும் ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அறியமுடிகின்றது.

நாட்டில் இன்று மத்திய வங்கியில் ‘ஊழல்’ என்ற வைரஸ். உரம் பாவனை விடயத்திலும் கொமிஷ் என்ற வைரஸ்.  சீனி இல்லை, பால்மா இல்லை. ஏன்! மலசலகூட உதிரிபாகங்கள்கூட இல்லை.
இப்படி பல வைரஸ்களை இந்த அரசு உருவாக்கியுள்ளது. எனவே, இந்த வைரஸ்களை ஒழிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.  ” – என்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles